தூத்துக்குடி

மதுக்கடையை முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டம்

DIN

எட்டயபுரத்தில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வீட்டில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்புவனம் கிராம பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாட்சியர் பாக்யலட்சுமி அளித்த உறுதிமொழிக்கு மாறாக  வெள்ளிக்கிழமை அந்த  கடையை திறந்து ஊழியர்கள் மது விற்பனையை தொடங்கினர். இதையறிந்த மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வெளியேறினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் ரவீந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் நடராஜன், மூக்கையா, பாஜக ஒன்றியத் தலைவர் ராம்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT