தூத்துக்குடி

வைகாசி விசாகத் திருவிழா: மே 29 இல் தூத்துக்குடியில் ஆலோசனைக் கூட்டம்

DIN

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (மே 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ன்ற ஜூன் 7ஆம் தேதியன்று வைகாசி விசாகத் திருவிழா தொடங்கி நடைபெறுகிறது. திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
திங்கள்கிழமை (மே 29)  மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அவரது அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில்  நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுத் தேவையான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT