முகப்பு
தூத்துக்குடி

9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் மாவட்டத்தில் 9 இடங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (நவ. 3) நடைபெறுகிறது. அதன்படி,  தூத்துக்குடி வட்டம் அய்யனடைப்பு, ஸ்ரீவைகுண்டம் வட்டம் கீழ்பிடாகை அப்பன் கோயில், திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூர், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி, கோவில்பட்டி வட்டம் இடைசெவல் பகுதி - 1, விளாத்திகுளம் வட்டம் மல்லீஸ்வரபுரம் குமாரசக்கனாபுரம்,  எட்டயபுரம் வட்டம் சிந்தலக்கரை,  ஓட்டப்பிடாரம் வட்டம் மலைப்பட்டி,  கயத்தாறு வட்டம் காலாங்கரைப்பட்டி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்,  இலவச வீட்டுமனை பட்டாக்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை,  பிறப்பு - இறப்பு சான்றுகள்,  சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனு அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →