இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி முற்றுகை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆவல்நத்தம் ஊராட்சிப் பகுதி பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆவல்நத்தம் ஊராட்சிப் பகுதி பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவல்நத்தம் ஊராட்சி சுந்தரலிங்கபுரம் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் அளித்தனர். இதில், பகத்சிங் மன்றத்தின் விவசாய சங்கத் தலைவர் சீத்தாராமன், மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி, ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கொம்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் பாண்டியராஜன், கிளைச் செயலர் கணபதி, பெண்கள் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த பேச்சியம்மாள், ஆவல்நத்தத்தைச் சேர்ந்த சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.