முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூரில் சைவ வேளாளர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட  அருள்மிகு முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

திருச்செந்தூரில் சைவ வேளாளர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட  அருள்மிகு முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு,  கும்ப பூஜை மற்றும் 1008 சங்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டுவரப்பட்டு,  விமான அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சங்கு அபிஷேகமாகி,  சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத் தலைவர் க.சுப்பிரமணியன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் சைவ வேளாளர் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →