முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம  நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம  நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம  நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 தூத்துக்குடி சங்கர்காலனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தனமாரிமுத்து மனைவி அன்னலட்சுமி (55). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தனமாரிமுத்து இறந்து விட்ட நிலையில், பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அன்னலட்சமி சென்றார்.  இந்நிலையில், பெங்களூருவில் இருந்து புதன்கிழமை திரும்பி வந்த அன்னலட்சுமி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் பித்தளை விளக்குகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்து அன்னலட்சுமி அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →