"மின்னணு குடும்ப அட்டையில் திருத்தப் பணி: வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை முகாம்'
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (நவ. 11) நடைபெறும் சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (நவ. 11) நடைபெறும் சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, மாதம்தோறும் 2ஆவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நவம்பர் மாத சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் - நீக்குதல், சேதமடைந்த அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்படும்.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியிருந்தால் முகாமிலேயே பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.