முகப்பு
தூத்துக்குடி

"அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களும் பயன் பெறலாம்'

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களும் காப்பீடு எடுத்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களும் காப்பீடு எடுத்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வி. ராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில், அரசு ஊழியர்கள் மட்டுமே  ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க இதுவரை அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பாலிசி எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த பிரீமியம்,  அதிக போனஸ்,  செலுத்தும் பிரீமியத் தொகைக்கு வருமான வரிச்சலுகை உண்டு. நூறு சதவீத உத்தரவாதம்,  பிரீமியத் தொகையை இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் செலுத்தும் வசதி. முதிர்வு தொகைக்கு வருமான வரி கிடையாது. கடன்பெறும் வசதி உள்ளிட்டவை இந்தத் திட்டத்தில் உள்ளது.
எனவே, தனியார் நிறுவன ஊழியர்களும் அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →