தூத்துக்குடி

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள்

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள வீரப்பட்டி கிராமத்திலிருந்து மாணவ, மாணவியரை அழைத்து செல்லும் தனியார் பள்ளி வாகனம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 
எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டியில் செயல்படும் தனியார் மேல்நிலைப்பள்ளி வாகனம் கடந்த 27ஆம் தேதியன்று வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை ஏற்றிக்கொண்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த மாணவ, மாணவியர் 18 பேர் லேசான காயமடைந்தனர்.  மேலும் மூன்று மாணவிகள்  பலத்த காயமடைந்தனர்.  
 இந்நிலையில் இந்த விபத்துக்கு பின்னர் வீரப்பட்டிக்கு செல்லும் பள்ளி வாகனத்தை பள்ளி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் நிறுத்திவிட்டது. விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகள் குறித்தும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் பாதிப்படைந்த மாணவ, மாணவியர் மற்றும் கிராம மக்கள் வியாழக்கிழமை எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 பின்னர் வட்டாட்சியர் சூர்ய கலாவிடம் அளித்த  மனு: வீரப்பட்டியிலிருந்து இயக்கப்படும் பள்ளி வாகனத்துக்கு மாணவ மாணவியர் குறிப்பிட்ட தொகையை வாகன கட்டணமாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முன்னறிவிப்பின்றி பள்ளி வாகனத்தை நிறுத்தியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி வீரப்பட்டி கிராம மாணவ மாணவியர் சென்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பள்ளி நிர்வாகம் சம்பந்தபட்டவர்கள் யாருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.  தகுந்த சிகிச்சைக்கு கூட மாணவ மாணவியரை  அழைத்துச் செல்லாமல் மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து கிராம மக்கள் பள்ளிக்கு சென்ற பிறகே மருத்துவ சிகிச்சைக்கு மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது வீரப்பட்டி கிராமத்துக்கு பள்ளி வாகனம் இயக்குவதை பள்ளி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதனால் மாணவ, மாணவியரின் கல்வி பாதித்துள்ளது.
எனவே வீரப்பட்டி கிராமத்துக்கு பள்ளி வாகனத்தை சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவியருக்கு சிகிச்சையை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 
 மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT