நெடுங்குளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்
நெடுங்குளத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலிலியல் வன்முறை மீறல்கள் குறித்த சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நெடுங்குளத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலிலியல் வன்முறை மீறல்கள் குறித்த சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் ரவிமதி வரவேற்றார். இதில், வழக்குரைஞர் சாத்ராக், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, மத்திய சமூக நல குடும்ப ஆலோசகர்கள் காமேஸ், பிரிஸ்ஸி ஆகியோர் பேசினர்.
இதில், பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கு 109, பெண்கள் பாதுகாப்புக்கு 1091 இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தலைமை காவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் ராஜா நன்றி கூறினார்.