காஷ்மீரிலிருந்து இளைஞர்கள் சைக்கிள் யாத்திரை: கோவில்பட்டியில் வரவேற்பு
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்களுக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்களுக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் பாரதம் சாதனை படைக்க வேண்டும். பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கிரிடா பாரதி என்ற அமைப்பின் சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 இளைஞர்கள் கொண்ட குழு செல்லும் சைக்கிள் யாத்திரை கடந்த செப். 9ஆம் தேதி காஷ்மீரில் தொடங்கியது.
கோவில்பட்டிக்கு புதன்கிழமை வந்த அந்த இளைஞர்களுக்கு பயணியர் விடுதி முன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கேசவன், சேவா பாரதி மாவட்ட அமைப்பாளர் தானுமாமூர்த்தி, பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் மாரிசெல்வம், நகரத் தலைவர் வேல்ராஜா, பொதுச் செயலர் முனியராஜ், நகர இளைஞரணித் தலைவர் காளிதாசன், நகர பொதுச்செயலர் தினேஷ்குமார், பாஜக சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த இளைஞர்கள் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை (அக்.12) தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.