தூத்துக்குடி

"குவைத்தில் தொலைத்தொடர்பு பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்'

DIN

குவைத்தில் தொலைத்தொடர்பு பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தொலைத்தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணியிடங்களுக்கு 21 முதல் 50 வயதுக்குள்பட்டு தொலைத்தொடர்புத் துறை பணி அனுபவம் பெற்று 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்று ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் வைத்துள்ளோர் தேவைப்படுகின்றனர்.
மாத ஊதியம் ரூ. 23,760 என்ற அடிப்படையில் 9 கட்டடத் தொழிலாளர்கள்,  இரண்டு தச்சர்கள் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் பொருத்துவதில் அனுபவம் பெற்ற 82 லேபர்கள் (மாத ஊதியம் ரூ.17,280) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவம் பெற்ற குவைத் நாட்டின் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் (மாத ஊதியம் ரூ.28,080) தேவைப்படுகின்றனர். 30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருத்தல் வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு ரரர.ஞஙஇஙஅசடஞரஉத.இஞங என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்றாண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம்,  மருத்துவக் காப்பீடு, மிகை நேர பணி ஊதியம் மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின்,  தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம்,  பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படத்தை OM​C​T​C​I​L@​G​M​A​I​L.​C​OM என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும், விவரங்களை அறிய  044-22505886,  22502267, 22500417  என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT