தூத்துக்குடி

கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2015-16, 2016-17ஆம் ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு மானாவாரிப் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டை உடனே வழங்கவேண்டும். விவசாயிகளுக்கான அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புது பயிர் கடன் உடனே வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் நல்லையா தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் தமிழரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமையா, வட்டச் செயலர்கள் லெனின்குமார் (கோவில்பட்டி), மாரிச்சாமி (விளாத்திகுளம்), கிருஷ்ணமூர்த்தி (எட்டயபுரம்), செல்வம் (ஓட்டப்பிடாரம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலர் சங்கரப்பன் உள்பட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT