FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உணவில் சர்க்கரையைத் தவிர்க்க... என்ன செய்ய வேண்டும்?

உணவில் சர்க்கரையைத் தவிர்க்க செய்ய வேண்டியது பற்றி...

- IANS
பகிர்:

இன்று பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம் சர்க்கரைதான். கண்ணுக்குத் தெரியாமல் இனிப்பு நிறைந்த பொருள்களை அதிகம் சாப்பிடுகிறோம்.

உடல் எடையைக் குறைக்க, நீரிழிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க உணவில் இனிப்பைக் கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குறிப்பாக இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே நீரிழிவு நோய் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல 30 வயதுக்கு மேல் உள்ளவர்களே பல்வேறு உடல்சார்ந்த கோளாறுகளை எதிர்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

அதனால் உணவில் சர்க்கரையைக் குறைக்க சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சர்க்கரையைத் தவிர்க்கும் சில வழிகள்...

பாட்டில்களில் அடைக்கப்பட்ட செயற்கையான சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். இதில் இனிப்புச் சுவைக்காக சுவையூட்டிகள் சேர்க்கப்படும். நீராகாரத்தில் உள்ள இனிப்புச் சுவையானது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அதேபோல பழச்சாறுகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பழங்களைச் சாறாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் சர்க்கரை மூலக்கூறுகள் சேரும். மாறாக, முழுதாக பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

பிரக்ட்டோஸ், சுக்ரோஸ் நிறைந்த உணவுப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

டீ/ காபி குடிப்பதைத் தவிர்க்கலாம் அல்லது இனிப்பு சேர்க்காமல் பால் சேர்க்காமல் பிளாக் டீ, கிரீன் டீ அருந்தலாம்.

நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது, முழு கோதுமை உணவுப் பொருள்கள், நட்ஸ் மூலமாக செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளில் சர்க்கரை இருக்கும்.

சாக்லேட், பிஸ்கட் போன்ற பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டாம். பசிக்கும்போது நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்.

சர்க்கரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கொடுத்தாலும் வேண்டாம் என்று கூற கற்றுக்கொள்ளுங்கள். அந்த கட்டுப்பாடுடன் இருந்தால் உணவில் சர்க்கரையைக் குறைக்கலாம், ஆரோக்கியமாக இருக்கலாம்.

summary

Tips to cut sugar in your healthy diet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments