FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சர்க்கரை உணவுகள் அதிகம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறதா?

நீரிழிவு பிரச்னை குறித்த தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்....

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:57 pm IST
கோப்புப் படம் - IANs
பகிர்:

- அன்னா ஜோஸ்

நீரிழிவு, இளைஞர்களுக்கு வராதா? உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு வரும் ஆபத்து அதிகமா? அதிக சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு வருமா?

கோழிக்கோட்டில் உள்ள டாக்டர் சுரேஷ் டயாப்கேர் இந்தியா நிறுவனத்தின் நீரிழிவு நிபுணர் டாக்டர் சுரேஷ், நீரிழிவு குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார்.

Advertisement

Advertisement

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

அதிக சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு ஏற்படுகிறது

சர்க்கரை சாப்பிடுவது மட்டுமே நீரிழிவை ஏற்படுத்தாது. மரபியல் காரணங்கள், இன்சுலின் எதிர்ப்பு, அதிக உடல் எடை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பிற ஆபத்துக் காரணிகளின் கலவையால் டைப் -2 நீரிழிவு உருவாகிறது. இருப்பினும், அடிக்கடி சர்க்கரை பானங்கள் மற்றும் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்து, அதன் மூலமாக நீரிழிவு உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவு - வயது தொடர்பான நோய், இளைஞர்களைப் பாதிக்காது

நீரிழிவு எந்த வயதிலும் ஏற்படலாம். டைப் -2 நீரிழிவு பிரச்னையின் ஆபத்து வயதுடன் தொடர்புடையது என்றாலும் உடல் இயக்கமற்ற வாழ்க்கை முறை, உடல் பருமன், மரபணு சார்ந்து இளம் வயதினர், பதின்ம வயதினர் ஏன் குழந்தைகளிடமும் அதிகரித்துக் காணப்படுகிறது. டைப் -1 நீரிழிவு பொதுவாக குழந்தைப் பருவத்திலோ அல்லது பதின்ம வயதிலோ உருவாகிறது.

சரியான உணவு, உடல் செயல்பாடு நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவும்

உண்மைதான். தொடக்க நிலையில் உள்ள டைப்-2 நீரிழிவு உள்ள சிலருக்கு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதிலிருந்து முழுமையாக விடுபடவும் முடியும்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டுமே நீரிழிவுக்கான வழக்கமான பரிசோதனைகள் தேவை

நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலர் உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பதில்லை, குறிப்பாக இந்தியர்கள் போன்ற ஆசிய மக்களிடையே. குடும்பத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், கர்ப்பகால நீரிழிவு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக எடையுடன் இல்லாவிட்டாலும்கூட, தவறாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Myths and facts about diabetes, doctors explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments