FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க செய்ய வேண்டியது பற்றி...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:43 pm IST
கோப்புப் படம் - Express/ Sri Loganathan Velmurugan
பகிர்:

இரவு முழுவதும் நன்றாகத் தூங்கினாலும் காலையில் சிலர் எப்போதுமே சோர்வாகக் காணப்படுவார்கள். ஒரு டீ அல்லது காபியைக் குடித்தாலும் அதன்பிறகு வேலையைத் தொடங்கினாலும் நாள் முழுவதும் சோர்வாகவே காணப்படுவார்கள்.

அப்படியானவர்கள் காலையில் எழுந்ததும் சில செயல்களைச் செய்யும்போது உடலும் மனமும் சுறுசுறுப்பாகும்.

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டியது...

Advertisement

Advertisement

சூரிய ஒளி

காலை எழுந்தவுடன் உடலானது சூரிய ஒளி பெற வேண்டும். சூரிய ஒளி உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தைச் சீராக்கி, மனநிலையையும் ஆற்றலையும் மேம்படுத்துவதோடு, உங்கள் உடல், வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. வைட்டமின் டி உடலில் நோயெதிர்ப்பு தன்மைக்கு முக்கியமானது.

தண்ணீர்

அதேபோல காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். பெரும்பாலும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்த பிறகு சிறிது நேரம் கழித்து டீ, காபி குடிக்கலாம்.

உடற்பயிற்சி

அடுத்ததாக காலையில் லேசான உடற்பயிற்சியாவது அவசியம். காலையில் குறைந்தது ஒரு 10 - 15 நிமிடங்களாவது நடப்பது உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். எவ்வளவு சோம்பேறித்தனம் இருந்தாலும் சில நிமிடங்களாவது நடப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே யோகா, உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றைச் செய்யலாம். உங்களது வேலைகளை முடித்தபிறகாவது உடல்நலனுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

நேர்மறை சிந்தனை

சில சமயங்களில், சூழ்நிலைகள் சரியாக அமையாவிட்டாலும், ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்வது ஒரு சிறந்த உத்தியாகும். எனவே, நேர்மறை சிந்தனை மிகவும் அவசியம். காலையில் எழுந்தவுடன் இன்றைய நாளுக்காக கடவுளுக்கு நன்றி கூறி அந்த நாளைத் தொடங்குங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

திட்டமிடல்

பொதுவாக காலை எழுந்ததும் என்னென்ன வேலைகள் உள்ளது என்று தெரியாமலேயே அந்த நாளைத் தொடங்குவதைவிட அன்றைய நாள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு பின்னர் தொடங்குங்கள். அதனை முழுமையாகச் செய்துமுடிக்கவும் முயற்சி செய்யுங்கள். அது உங்கள் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வேலை எளிதாக முடிய இந்த பட்டியல் உதவும். உங்களுக்கான நேரமும் மிச்சப்படும். எதிர்காலத்தில் உங்களுடைய வளர்ச்சிக்கு இந்த திட்டமிடல் முக்கிய காரணமாக இருக்கும்.

summary

What should you do to stay energetic right after waking up in the morning?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments