தூத்துக்குடி

மின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம் அளிக்காதவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைக்கு இதுவரை புகைப்படம் அளிக்காதவர்கள் சனிக்கிழமை (அக். 14) நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு புகைப்படத்தை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு 1.4.2017 முதல் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் புகைப்படம் இல்லாததால் சிலருக்கு மின்னனு குடும்ப அட்டை அச்சடிக்க இயலாமல் உள்ளது.
 புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் அந்தந்த பகுதி நியாயவிலைக் கடைகளில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  
அந்த பட்டியலில் உள்ள குடும்ப அட்டைதாராகள் தங்களது குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (அக். 14) நடைபெறும் சிறப்பு முகாம்களில் தவறாது ஒப்படைக்கவேண்டும். புகைப்படம் கொடுத்தவுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு மின்னனு குடும்ப அட்டை உடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT