தூத்துக்குடி

ஆற்றல் சேமிப்பு- தணிக்கை தொழில் நிறுவனங்களுக்கு 19இல் விழிப்புணர்வு முகாம்

DIN

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றல் சேமிப்பு- தணிக்கை குறித்த விழிப்புணர்வைப் பெறும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ராஜராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஆற்றல் தணிக்கை மேம்பாடும், ஆற்றல் சேமிப்பும் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து, மாவட்ட தொழில் மையங்கள் வழியாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆற்றல் சேமிப்பு- தணிக்கை குறித்த விழிப்புணர்வும், அதற்கான பயிற்சியும் தொழில்நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மேலும், 50 சதவீதம் மானியக் கட்டணத்தில் ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளவும், தணிக்கை ஆலோசனைப்படி இயந்திரங்களை நிறுவினால் அதற்கான முதலீட்டில் 25 சதவீதம் மானியம் அளிக்கவும் பரிந்துரைக்கப்படும்.
இதற்கான விழிப்புணர்வு கூட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி மண்டபத்தில் இம்மாதம் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்தில், ஜே.சி.ஐ. சர்வதேச பயிற்சியாளர் பி.டென்சிங் , சிவகங்கை கே.எல்.என். பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மற்றும் ஆற்றல் ஆலோசகர் வெங்கடநாராயணன் மற்றும் நானும் (ராஜராஜன்) ஆற்றல் சேமிப்பு குறித்து விளக்கமளிக்கவுள்ளோம்.
கூட்டத்தில், மாவட்டத் தொழில் மைய திட்ட மேலாளர் ஸ்வர்ணலதா, கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சங்கரசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவர் பரமசிவன், மாவட்டத் தொழில் மைய உதவிப் பொறியாளர் (தொழில்கள்) முருகன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, ஆற்றல் சேமிப்பு முறைகள் குறித்து விளக்கம் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT