தூத்துக்குடி

நீர்வளங்களைப் பாதுகாக்கக் கோரி 18 இல் குடியேறும் போராட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் மனு

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப்.18) குடியேரும் போராட்டம் நடத்த உள்ளதாக நிலத்தடிநீர் பாதுகாப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் குணசீலன், ராஜா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடிநீர் வளம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக தூத்துக்குடி, சாத்தான்குளம், உடன்குடி, விளாத்திகுளம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் நிலத்தடிநீர் எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்திலும் தடைஉத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நிலத்தடிநீரை எடுத்துச் செல்லும் லாரிகளை பிடித்து கொடுத்தாலும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, தொழிற்சாலைகள் நடத்தும் நிலத்தடிநீர் திருட்டை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நிலத்தடிநீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இம்மாதம் 18 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT