தூத்துக்குடி

உடன்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

DIN

உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய இயக்குநர் இசிதோர் தலைமை வகித்தார். பங்குத் தந்தைகள் பீட்டர்ராஜ், பங்குராஸ், சகாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சிறப்பு பிரார்த்தனை, ஜெபமாலை, கொடி பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு பங்குத்தந்தைகள் தலைமையில் ஜெபமாலை,பிரார்த்தனை, திருயாத்திரை திருப்பலி, பாவ சங்கீர்த்தனம், மறையுரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
செப். 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு நற்கருணை பவனி, செப்.23ஆம் தேதி திருமுழுக்கு திருவிழா, மாலை 5 மணிக்கு அன்னையின் சப்பர பவனி, ஆராதனை, இரவு 8 மணிக்கு ஐக்கிய விருந்து, செப்.24ஆம் தேதி திருவிழா திருப்பலி, ஐக்கிய விருந்து, இரவு 8 மணிக்கு ஜெபமாலை, சப்பர பவனி ஆகியன நடைபெறுகிறது. செப்.25ஆம் தேதி அசன விழா, காலை 7 மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள், விழாக் குழுத் தலைவர் ஜெயராஜ், பொருளாளர் சித்திரைராஜ், செயலர் அலிஸ்டர் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT