தூத்துக்குடி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

DIN

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலர் டக்லஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் கணேசன், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர் அமல்ராஜ், துணைச் செயலர் செந்தில் பாரியா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறுத்தை குமார், தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் தமிழ்பாண்டியன், மீனவர் மேம்பாட்டு பேராயம் மாநிலச் செயலர் நியூட்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கட்சியின் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் அகிலன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.
இதில், நகரச் செயலர் கருப்பசாமி, ஒன்றியச் செயலர்கள் காளிராஜ் (கயத்தாறு), மாதவன் (விளாத்திகுளம்), சங்கர் (புதூர்), வழக்குரைஞரணியைச் சேர்ந்த பெஞ்சமன் பிராங்க்ளின், மாவட்டப் பொருளாளர் சமுத்திரப்பாண்டியன், இளஞ்சிறுத்தைகள் மாநிலப் பொறுப்பாளர் காட்டர் சாமுவேல், மாநில கருத்தியல் கொள்கை பரப்புச் செயலர் தமிழ்குட்டி, மதுரை எவிடென்ஸ் கதிர், மாவட்ட துணைச் செயலர் மோகன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்: தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் ரகுவரன் தலைமை வகித்தார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் சு.விடுதலைச்செழியன், மாவட்ட துணை அமைப்பாளர் அருண், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் பாரிவள்ளல், ஒன்றியச் செயலர்கள் திருச்செந்தூர் ஆ.சங்கத்தமிழன், உடன்குடி தமிழ்வாணன், மகளிரணி மாவட்டச் செயலர் ஜெயக்கொடி, மாரியப்பன், ஆனந்த், கதிரவன், அம்பேத்கர், தனுஷ்கோடி, மதிமுக ஒன்றிய இளைஞரணிச் செயலர் சி.அ.நசீர், நாம் தமிழர் கட்சி மகாராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT