"நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறுவோர் ஏப். 30-க்குள் ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யவேண்டும்'
நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை ஏப். 30ஆம் தேதிக்குள்
நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை ஏப். 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க. பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2018-2019 ஆம் ஆண்டு நேர்காணலுக்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), எண் 1, விக்டோரியா தெருவில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யவேண்டும்.
அலுவலகத்துக்கு நேரில் வரும்போது, ஆயுள் சான்று அசல் (சான்றொப்பமிட்ட புகைப்படத்துடன்), குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (நாளது தேதிவரை பதிவு செய்தது), கடந்த ஆண்டு அலுவலகத்தில் கொடுத்த அட்டை, ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.