நாசரேத் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பை வைத்திருந்தால் நடவடிக்கை
நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும்
நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நாசரேத் பேரூராட்சி பகுதியில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், கப்கள், தட்டுகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பேரூராட்சிக்குள்பட்டபகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாகவும், உபயோகப்படுத்தப்படுவதாகவும் பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆதலால் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.