முகப்பு
தூத்துக்குடி

ரத்த கொடையாளர்களுக்குப் பாராட்டு

கோவில்பட்டியில் பகத்சிங் மன்றத்தின் சார்பில் ரத்த கொடையாளர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:28 AM
பகிர்:

கோவில்பட்டியில் பகத்சிங் மன்றத்தின் சார்பில் ரத்த கொடையாளர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
சுதந்திர போராட்டத் தியாகி பகத்சிங்கின் 87ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பகத்சிங் மன்றத்தின் சார்பில் மார்ச் 23ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா லாயல் மில் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.  விழாவிற்கு பகத்சிங் மன்ற ஒன்றியக் குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார். 
ரத்த கொடையாளர்களை மன்றத்தின் மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் பாராட்டிப் பேசினார். ரத்த தான கொடையாளர்களுக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.  தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில், மன்றத்தின் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன், பெண்கள் பாதுகாப்புக் குழு வட்டத் தலைவர் சுந்தரி, நரிக்குறவர் சங்க மாவட்டச் செயலர் கலியமூர்த்தி, மக்கள் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த சுப்பையா, ஜீவ அனுகிரகா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜேந்திரன், கோவில்பட்டி கட்டுமான சங்க வட்டச் செயலர் ரமேஷ்கண்ணா, ஆட்டோ தொழிற்சங்க வட்டச் செயலர் கொம்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.