தூத்துக்குடி

"ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசர சட்டம் இயற்ற வேண்டும்'

DIN

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.
தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பண்டாரம்பட்டி, மடத்தூர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பி.ஆர். பாண்டியன் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு உரிமையில்லை என அரசிதழில் வெளிவந்த பிறகு, அப் பிரச்னையை தீர்ப்பதற்கான முடிவு மத்திய அரசின் கையிலேயே உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்னும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். தமிழக அரசு காவிரி பிரச்னையில் வெளிப்படையாக செயல்படவில்லை என்றார் அவர். பேட்டியின்போது, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்திமதிநாதன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT