தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சித்ரா பெளர்ணமி சிறப்பு வழிபாடு
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடிதூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சித்ரா பெளர்ணமி சிறப்பு வழிபாடு
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி ஆலயத்தில் சிவபெருமான் குரு மகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி உள்ளார். இந்த ஆலயத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலும், உலக அமைதி வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில் வளங்களும் சிறக்க வேண்டியும் குரு மகாலிங்கேஸ்வராக எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும் , ஸ்ரீமகா பிரத்தியங்கிராதேவி-காலபைரவருக்கும் மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேமும், ருத்திராட்சத்திலான சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.