முகப்பு
தூத்துக்குடி

நங்கைமொழி,கந்தபுரம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில், கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில், கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
நங்கைமொழி அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் காலை 11 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள்,  பூர்ணாகுதி, சுவாமிக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம்,  சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் 108 திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 
கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் பூஜை செய்து கொண்டு வரப்பட்ட வெள்ளிக்காசு வழங்கப்பட்டது.  பகல் 12 மணிக்கு ஆரத்தி, 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
 
முழு கட்டுரையைப் படிக்க →