தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் பண்பாட்டுப் போட்டிகள்

DIN

குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் நினைவுப் பள்ளியில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
உடன்குடி ஒன்றிய அளவில் ஐந்து பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்  போட்டிக்கு வட்டார கல்வி அலுவலர் நம்பித்துரை தலைமை வகித்தார். இதில் கதை கூறுதல், ஒப்பித்தல், இந்து சமய பெருமைகள், விநாடி-வினா, பேச்சு , கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தலைமையாசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். அருள்மிகு  முத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் இந்து சமய நெறிகள்,  ஒழுக்கத்துடன் வாழ்தல், தன்னம்பிக்கையின் வெற்றி ஆகியவை குறித்து பேசினார். 
போட்டிகளில் சிறப்பிடம்  பெற்றவர்களுக்கு   ஜெ.தர்மராஜ் பரிசுகளை வழங்கினார். விவேகானந்தா கேந்திர மேற்பார்வையாளர் சண்முகபாரதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT