தூத்துக்குடி

நவீன ஆடை வடிவமைப்பு: தூத்துக்குடியில் பயிற்சி தொடக்கம்

DIN

தூத்துக்குடியில் பெண்களுக்கான நவீன ஆடை வடிவமைப்பு பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில்,  மதர் சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவச தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச நவீன ஆடை வடிவமைப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா முத்தையாபுரம்  அபிராமி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அண்மையில் நடைபெற்றது.  பயிற்சி மைய இயக்குநர் மு. துரைசாமி பயிற்சியை தொடங்கிவைத்து பயனாளிக்கு  உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில்,  மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி,  பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார்,  மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ். பானுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT