தூத்துக்குடி

தூத்துக்குடி படகு குழாமில் துடுப்புப் படகு சவாரி தொடக்கம்

DIN

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் துடுப்பு படகு சவாரியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் ரூ.139 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் துடுப்புப் படகு சவாரி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு படகு சவாரியை கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியது:
வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் சி.எஸ்.ஆர். நிதி ரூ.79 லட்சம், தூத்துக்குடி மாநகராட்சி நிதி ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் ரோச் பூங்கா அருகில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களுக்கு நடைபாதை, சாலையோரப் பூங்காக்கள் மற்றும் படகு குழாமுடன் கூடிய துடுப்புப் படகு சவாரி, 6 கன்டெய்னர் மூலம் சிற்றுண்டி ஆகியவை இவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் துடுப்புப் படகு சவாரி மூலம் 1.8 கிலோ மீட்டர் வரை சவாரி செய்யலாம். இந்தப் படகு குழாமில் 10 துடுப்புப் படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்கள், நடைபயிற்சி செய்ய நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT