முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் பகுதியில் வீடு, கடையில் திருட்டு

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். அதே போல கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். அதே போல கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் ரகு (47). அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் செங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பினாராம். 
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. தகவலறிந்த காவல் ஆய்வாளர் ஷீஜாராணி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார்.
இதேபோல, திருச்செந்தூர் வடக்குரத வீதியில், தனியாருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையின் ஷட்டர் ஞாயிற்றுக்கிழமை காலையில் உடைக்கப்பட்டது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்டியிலிருந்து ரூ. 2500-ஐ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →