முகப்பு
தூத்துக்குடி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 
இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு,  கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.  காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஓட்டுநர்கள் உரிமம் இல்லாமல் கல்லூரி மாணவர், மாணவிகள் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  மேலும், சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். 
வாகன ஓட்டுநர்கள் வாகனத்திற்கான பதிவுச்சான்று,  காப்பீட்டுச் சான்று, ஓட்டுநர் உரிமம் முதலியவற்றை வைத்திருக்க வேண்டும்.  இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள் இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.  இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசமும், கார் ஓட்டுபவர்கள் சீட்-பெல்ட் அணிவதையும் தவிர்க்கக் கூடாது என அறிவுரை வழங்கினார். 
அதைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி விலை மதிப்பிட முடியாத உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும், விபத்தில்லா மாவட்டமாக தூத்துக்குடி திகழ கல்லூரி மாணவர், மாணவிகள் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதோடு பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும் என்றார். 
இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவர், மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மாணவி சோமசுந்தரி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →