தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கான ஆள்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கான ஆள்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 53 இடங்களுக்கான ஆள்கள் தேர்வு,தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் தூத்துக்குடியில் இருந்து 339 பேரும், கோவில்பட்டியில் இருந்து 324 பேரும், திருச்செந்தூரில் இருந்து 210 பேரும், பெண்கள் 47 பேரும் என மொத்தம் 920 பேர் கலந்துகொண்டனர். பல்வேறு கட்ட உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 53 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கெளசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.