முகப்பு
தூத்துக்குடி

"வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதமும் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை  வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை நேரடியாக மனுதாரர்களது (ஆதார் இணைக்கப்பட்ட) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல்வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்கவேண்டும். 
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000 (ஐம்பதாயிரத்திற்கு) மிகாமல் இருக்க வேண்டும். 
தகுதி உடையோர் தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 28ஆம் தேதிக்குள் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாள்களிலும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.