தூத்துக்குடி

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்  தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்;  ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்தையும், தொடக்கக் கல்வித் துறையை பள்ளிக்கல்வி துறையுடன் இணைத்ததையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டணியின் மாவட்டத் தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார்.  மாநில துணைத்தலைவர் லாசர், மாவட்டச் செயலர் சிவன், மாநில முன்னாள் பொருளாளர் வில்சன் பர்னபாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT