முகப்பு
தூத்துக்குடி

சிற்றுந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முற்றுகை

கோவில்பட்டியில் இயங்கி வரும் சிற்றுந்துகளின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் மற்றும் பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

கோவில்பட்டியில் இயங்கி வரும் சிற்றுந்துகளின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் மற்றும் பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட இலுப்பையூரணி, கூசாலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும், பயணச் சீட்டை முறையாக வழங்குவதில்லை எனவும் கூறி,  
சிற்றுந்துகள் கட்டணத்தை அரசு விதிகளின்படி வசூலிக்க வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தலைமையில்,  ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகரன்,  துணைத் தலைவர் மகேந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் விஜயபாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன்,  அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு கமிட்டி மாவட்டப் பொறுப்பாளர் பொன்ராஜ் மற்றும் இலுப்பையூரணி கிராம பெண்கள்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் திரண்டனர். 
பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சக்திவேலிடம்  மனு அளித்துவிட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →