முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 4 ஆவது அலகில் திங்கள்கிழமை திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Updated On : 22 மே, 2018 at 4:45 AM
பகிர்:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 4 ஆவது அலகில் திங்கள்கிழமை திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக முழு மின் உற்பத்தியை எட்டாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், 4ஆவது அலகில் உள்ள கொதிகலனில் திங்கள்கிழமை திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த அலகின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு அலகுகளிலும் வழக்கம்போல தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கடந்த 19 ஆம் தேதி 3ஆவது அலகில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.