தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணி

DIN

சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலை, , பஜார் பகுதியில் கடை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுவதாகவும், இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது எனவும் சமூக அமைப்புகள், உழவர் உழைப்பாளர்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக அளவீடு செய்யது, ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சாத்தான்குளம் பஜாரில் மண்டல துணை வட்டாட்சியர் அகிலா தலைமையில், சார் வட்ட துணை ஆய்வர் நாகராஜன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக அளவீடும் பணி நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், நில அளவையர் தேவிகா, வருவாய் ஆய்வாளர் தங்கச்சாமி, சாலை ஆய்வாளர்கள் ஆ.முருகன், உ.முருகன், கிராம நிர்வாக அலுவலர் ரவிசின்னத்துரை, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சுடலை ஆகியோர் உடன் சென்றனர். அப்போது முறையாக அளவீடு செய்து முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT