தூத்துக்குடி

தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

கோவில்பட்டி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், நல்லிணக்கப் பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட அமைப்பாளர் பொன்ராஜ், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொழிற்சங்கத் தலைவர் அய்யாப்பிள்ளை, மனித நேய உதவும் கரங்கள் நிறுவனர் இந்தியன் பிரகாஷ், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர் நலச் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, செயலர் ராமசுப்பு, ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் மகேந்திரன், துணைச் செயலர் பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தனியார் மற்றும் அரசு சார்பு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்
அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை உடனடியாக பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, தொழிலாளர்கள் வைப்பு நிதி ஊதியத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வழங்க வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் திரண்டு ஜூன் 7ஆம் தேதி கோவில்பட்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT