தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மகளிருக்கு தொழிற்பயிற்சி

DIN

வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிர் தொழில் முனைவோர்களுக்கு பெயிண்டிங் தொழில்நுட்பம் குறித்த 15 நாள் பயிற்சி முகாம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
வேம்பு மக்கள் சக்தி இயக்க இயக்குநர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஆரோக்கிய மான்சிங் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் பெயிண்டிங் தொழில்நுட்பம், பெயிண்ட் அடிக்கும் நவீன உத்திகள், செய்முறை பயிற்சிகள் ஆகியன வழங்கப்பட்டன. 
இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30 பெண்கள் பயிற்சி பெற்றனர்.  அனைவருக்கும் ஊக்கத்தொகை, பெயிண்ட் தொழிலுக்கு தேவையான பொருள்கள் அடங்கிய பெட்டகம், சான்றிதழ்கள், பெண் தொழில் முனைவோருக்கான அடையாள அட்டை ஆகியன வழங்கப்பட்டன.
இதில் வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த விஜய், முரளி, வீரலட்சுமி, மாரீஸ்வரி,  பெயின்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT