தூத்துக்குடி

தமிழக ஹாக்கி அணிக்கு லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மாணவர்கள் தேர்வு

DIN

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெறும் இரு மாணவர்கள் தமிழக ஹாக்கி அணிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளனர். 
கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் 3ஆம் ஆண்டு பயிற்சி பெறும் மாணவர்களான கே.பாரத், கே.கார்த்தி ஆகிய இரு மாணவர்கள் கோவை மற்றும் வாடிப்பட்டியில் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெற்ற 14 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட தமிழக ஹாக்கி அணி வீரர்களுக்கான தேர்வில் பங்கேற்று, தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு பெற்றனர். 
இருவரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடவுள்ளனர். 
லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இயந்திரவியல் துறை பயிலும் மாணவர் புவனேஸ்வரன்,  லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மூலம் ஊட்டி வெலிங்டன் எம்.ஆர்.சி.  ராணுவத்துக்கு தேர்வு பெற்றுள்ளார். 
இம்மாணவர்களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர்கள் சண்முகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), கண்ணப்பன் (கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) மற்றும் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஹாக்கி பயிற்சியாளர்கள், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT