தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டையில் அக்.15இல் மாற்றுத்திறனாளிகள் முகாம்

DIN

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்  கொம்மடிக்கோட்டை சந்தோஷ் நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ( அக். 15) நடைபெறுகிறது. 
தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கம், சாத்தான்குளம் வட்டார வளமையம்  சார்பில்  நடைபெறும் இம்முகாமில் 18 வயதுக்குள்பட்ட பார்வை, செவித்திறன், கை, கால் இயக்கம், மனவளர்ச்சி ஆகியவற்றில் குறைபாடு இருந்தால் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
மாற்றுத்திறன் குழந்தைகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 6,  குடும்ப அட்டை நகல்-1, ஆதார் அட்டை நகல்-1 கொண்டு வர வேண்டும். முகாம் பங்கேற்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை உள்பட பல்வேறு  உதவிகள் செய்துதரப்படும் என வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீ. மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இம்முகாம் குறித்த விழிப்புணர்வு  வாகன பிரசாரம் சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, செக்கடிவிளை, சிதம்பராபுரம், புதுக்குளம் கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT