உடன்குடி பள்ளி ஆண்டு விழா
உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர் நம்பித்துரை தலைமை வகித்தார். பள்ளியின் பழைய மாணவர்கள் வடிவேல், செ ந்தில்வேல்,லிங்கராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை பவுலா ராதிகா வரவேற் றார்.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அந்தோணி ரெக்ஸ்ராஜ் வாழ்த்தினார். போட்டிகள் மற்றும் தனித் திறமைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு எரிவாயு உருளை முகவர் ஜெ. தர்மராஜ் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். உதவி ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை வடக்கு காலன்குடியிருப்பு லெஜன்ட் இளைஞரணியினர் செய்திருந்தனர்.