முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சி

கோவில்பட்டி ஸ்ரீ ஸத்குரு ராகவேந்திர சுவாமி ஆராதனை கமிட்டி சார்பில் சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சியும்,

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:07 AM
பகிர்:

கோவில்பட்டி ஸ்ரீ ஸத்குரு ராகவேந்திர சுவாமி ஆராதனை கமிட்டி சார்பில் சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஜனையும் நடைபெற்றது. 
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயத்தில் வெள்ளிக்கிழமை உலக நன்மைக்காக 108  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சனிக்கிழமை காலை 8 மணிக்கு விசேஷ பூஜையும், 9 மணி முதல் சிறப்பு பஜனை, அபிஷேகம், சுமங்கலி பூஜை, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. 
மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 6  மணிக்கு அமிர்த வர்ஷினி குழுவினரின் வீணை கச்சேரி மற்றும் பரதநாட்டியம், இரவு 7 மணிக்கு கான்பூர் மகாதேவனின் சிறப்பு பஜனையும் நடைபெற்றது. 
இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் 1008  வடைமாலை சாத்தி ஆஞ்சநேயர் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  ஞாயிற்றுக்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.