விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
தென்மண்டல கதர் கிராம தொழில்கள் ஆணையம், மதர் சமூக சேவை நிறுவனம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பதற்கான
தென்மண்டல கதர் கிராம தொழில்கள் ஆணையம், மதர் சமூக சேவை நிறுவனம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பதற்கான ஆரம்பகால பயிற்சி முகாம் திருச்செந்தூரில் அனாவிம் தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
முகாம் நிறைவு விழாவுக்கு, மதர் சமூக சேவை நிறுவனத் தலைவர் சதீஷ்பாலன் தலைமை வகித்தார்.
மாநில தேனீ வளர்த்தல் பயிற்சி மைய அலுவலர் தாஸ் முகாமில் கலந்துகொண்டு பேசினார். மாநில தேனீ வளர்த்தல் பயிற்சி மைய பயிற்சியாளர் மாரியப்பன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
முகாமில், அனாவிம் அறக்கட்டளை இயக்குநர் செல்வின், லீடு அறக்கட்டளை இயக்குநர் எஸ்.பானுமதி, அறம் செய் அறக்கட்டளை இயக்குநர் ஜெயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.