தூத்துக்குடி

குட்கா முறைகேடு சோதனை முடிவுகளை வெளியிடாவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர்

DIN


குட்கா முறைகேடு தொடர்பான சோதனைகளின் முடிவுகளை வெளியிடாவிட்டால், மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நல்ல மழை பெய்தும்கூட, பல இடங்களில் வறட்சியே நீடிக்கிறது. தண்ணீர் சேமிப்பு இல்லை என்பதுதான் அதற்கு காரணம். தமிழக அரசு நீர்மேலாண்மையில் தோல்வி அடைந்திருக்கிறது. தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை ஏற்படுத்தி, ஆக்கப்பூர்வமான முறையில் தண்ணீரை சேமிக்கக்கூடிய நிலையை அரசு உருவாக்க வேண்டும். அப்போது தான், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் வறட்சியில் இருந்து மீளமுடியும்.
மேட்டூர் அணை 15 நாள்களில் 2 முறை நிரம்பியும், டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு தண்ணீர் போகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் பொதுப்பணித் துறையின் சுணக்கமான செயல்பாடு, செயலற்ற தன்மை. நீர்மேலாண்மையை ஒருபோதும் தமிழக அரசு முறையாக கையாண்டது இல்லை. இது வேதனைக்குரிய விஷயம். விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு நீர்மேலாண்மை முக்கியம் என்பதை அரசு உணர்ந்து, விவசாய திட்டங்களையும், நீர்மேலாண்மை திட்டங்களையும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்த வேண்டும்.
குட்கா முறைகேடு விவகாரத்தில் ஒரு காலக்கெடுக்குள் உண்மை நிலை தெரியவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். சோதனைக்கு மேல் சோதனை செய்து, முன்பு நடைபெற்ற பல சோதனைகள்போல முடிவு இல்லாமல் இருந்தால், மத்திய அரசின் மீதும், அந்த துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.
தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, தமாகா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலனின் தந்தை தர்மராஜ் நாடார் மறைந்ததைத் தொடர்ந்து அவரது உடலுக்கு ஜி.கே. வாசன் மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT