தூத்துக்குடி

மாவட்ட விளையாட்டுப் போட்டி:  நாசரேத் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளர்.
தூத்துக்குடியில்  மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றது. இதில், நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதில், ஜூனியர் பிரிவில் மாணவி இசக்கியம்மாள் குண்டு எறிதலில்  இரண்டாம் இடமும்,  வட்டு எறிதலில் இரண்டாம் இடமும், 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் மாணவிகள் இசக்கியம்மாள், மேகலா, ஹெப்சிபா, ஜேஸ்மின் ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்றனர்.
சீனியர் பிரிவில் மாணவி தேவி சாலினி ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும், மாணவி அபிஷா உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவி பூங்கொடி 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் முதல் இடமும், 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் மாணவி அபிராமி, சுபா, கனிமொழி ஆகியோர் இரண்டாமிடமும், மாவட்ட சதுரங்கப் போட்டியில் மாணவி  புஷ்பா ஏஞ்சலா முதலிடமும், மாணவி  புஷ்பா இவாஞ்சலின் மூன்றாமிடமும் பெற்று மண்டல அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். 
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை சில்வியா ரேச்சல், தாளாளர் சாந்தகுமாரி, உடற்கல்வி இயக்குநர் வினோதா, உடற்கல்வி ஆசிரியை ஜெபா மற்றும் ஆசிரியைகள் 
பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT