தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்

DIN

காயல்பட்டினம் முஸ்லிம் லீக் நகர  கிளை ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகரத் தலைவர் எம்.ஏ. முஹம்மத் ஹஸன் தலைமை வகித்தார். கட்சியின்  மாவட்ட  செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. சாலிஹ் கிரா அத் ஓதி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
காயல்பட்டினத்தில் உள்ள குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்கவும், போதைப் பொருள் நடமாட்டத்துக்கு தொடர் எதிர்ப்பு தெரிவிக்கவும்  வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.  என்.டி. முஹம்மது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT