தூத்துக்குடி

மக்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடாது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு 

DIN

தொடர்ந்து  செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசியதாவது: பாஜக தேசியக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருணாஸ் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதால் பலரது கண்டனத்துக்கு உள்ளாகினார்.  
நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் பணியாற்றுவோம் என சத்தியபிரமாணம் எடுத்து தான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கிறோம். சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர்கள் மக்களிடையே பீதியை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. அதை மறந்து பேசியதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.  
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் ஒட்டுமொத்த உணர்வும் எதிர்ப்பாக இருக்கும் நேரத்தில் ஆய்வுக்குழுவினரும்  அதைத்தான் பிரதிபலிக்க முடியுமே தவிர, மக்களின் கருத்துக்கு மாற்றாக எதையும் செய்ய முடியாது. ஆலையை மூடியதை முதல்வரும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆய்வுகளுக்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT