தூத்துக்குடி

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழா:  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.  ஆய்வு

DIN

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வம் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத் திருவிழா மே 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு,   துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்,   ஆய்வாளர்கள் பாலமுருகன், சிவலிங்க சேகர்,  ஞானராஜ் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT